ரெய்னா சர்வதேசக் கிரிக்கெட்டில் பங்களித்ததை விட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என செல்லமாக அழைத்து வருகின்றன. ஆனால் இறுதிகட்டத்தில் சி எஸ் கே அணியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அந்த அணியில் இருந்து விலகி, பின்னர் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகினார்.
இப்போது வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமானவரான ரெய்னா தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். லோகன் என்பவர் இயக்கும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரெய்னாதான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை DKS புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் அறிவிப்பை சமீபத்தில் சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.