ப்ரமோஷனலில் ஆட்டிட்யூட் காட்டிய சூர்யா விஜய் சேதுபதி?... வீடியோக்களை நீக்க மிரட்டலா?

vinoth

வியாழன், 3 ஜூலை 2025 (09:34 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபீனிக்ஸ் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் எல்லாம் முடிந்து ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இது சம்மந்தமாக சமீபத்தில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி வாயில் சூயிங் கம் மென்றுகொண்ட அலட்சிய தோரணையில் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தது இணையத்தில் ட்ரோல் ஆனது. ஏற்கனவே சூர்யா “அப்பா வேற நான் வேற” என பேசியது ட்ரோல் ஆன நிலையில் தற்போது வைரல் ஆகிவரும் ட்ரோல் வீடியோக்களை நீக்க சொல்லி இணையச் சேனல்களுக்கு விஜய் சேதுபதி தரப்பில் இருந்து மிரட்டல் வீடியோக்கள் வெளியானதாக சர்ச்சைகள் கிளம்பின.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள விஜய் சேதுபதி “எங்கள் தரப்பில் இருந்து அழைப்பு வந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்