சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே நானும் ரவுடிதான் இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளனர் .
இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் #KaathuVaakulaRenduKaadhal படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இப்படத்தை ஒடிடியில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை பிரபல ஒடிடி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்துவதாகவும் கூறப்படுகிறாது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் எனக் கூறப்படுகிறது.