வித்தியாசமான முறையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்கள் !

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (14:44 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வித்தியாசமான முறையிலும் ஆக்கப்பூர்வமான முறையிலும் கொண்டாடி வருகின்றனர்.

மக்கள் செல்வன் என்ற பட்டத்தைப் பெற்றுள்ள விஜய் சேதுபதி தனது ரசிகர்களிடம் இடைவெளி இல்லாமல் நெருக்கமாகப் பழகுபவர். இதனாலேயே இவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு. இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி இவரது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அடுத்து அதை பயனுள்ள வகையில் கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக சாலிகிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினர்.இந்த முகாமில் ரத்த தானமும் சில நோய்களுக்கான பரிசோதனைகளும் நடந்தது. மேலும் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல கோவையில் உள்ள ரசிகர்கள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்