உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் அவர்களின் 90வது பிறந்த நாள் இன்று கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சாருஹாசனின் மகள் சுஹாசினி, கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் உள்பட கமல் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தனது சகோதரரின் 90வது பிறந்த நாள் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான் என்று பதிவு செய்துள்ளார்