லியோ படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:22 IST)
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் சமீபத்தில் லியோ படத்தின் இறுதி எடிட்டிங் வெர்ஷனைப் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்