லியோ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் !

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:58 IST)
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதனால் இந்த படம் ஒரு பேன் இந்தியன் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகரான டென்ஸில் ஸ்மித் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் பரவின. இப்போது அதை உறுதி செய்துள்ளார் ஸ்மித்.

இது சம்மந்தமாக பேசியுள்ள அவர் “நான் லியோ படத்தில் 3 நாட்கள் நடித்தேன். என்னுடைய காட்சிகள் அனைத்தும் விஜய்யுடன் இணைந்துதான் அமைந்தது. இயக்குனர் லோகேஷ் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன வேண்டுமென்ற தெளிவோடு படப்பிடிப்பை நடத்தினார். லியோ படத்தை பற்றி சொல்லவேண்டுமென்றால் ‘அற்புதம்’ என்றுதான் சொல்லவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்