லியோ படம் வட இந்தியாவில் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட புது சிக்கல்!

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:07 IST)
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதனால் இந்த படம் ஒரு பேன் இந்தியன் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தொடக்கத்தின் போது இதை பேன் இந்தியன் படமாக கொண்டு செல்லவேண்டும் என தானும் மற்றும் இயக்குனர் லோகேஷ் கூறியதாக தயாரிப்பாளர் லலித்குமார் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது ரிலீஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தை வட இந்தியாவில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரைகளில் வெளியிடுவதில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அங்கு மல்டிப்ளக்ஸ்கள் ‘திரையரங்கில் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீசாகும் படங்களை மட்டும்தான் தங்கள் மல்டிப்ளக்ஸ் திரைகளில் ரிலீஸ் செய்வது என்ற முடிவை எடுத்துள்ளார்களாம். ஆனால் லியோ படமோ ரிலீஸூக்குப் பின்னர் நான்கு வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆக நெட்பிளிக்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் லியோ படத்தின் இந்தி டப்பிங் பெரியளவில் வட இந்தியாவில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்