ரி ரிலீஸுக்குக் காத்திருக்கும் விஜய்யின் இன்னொரு படம்!

vinoth

சனி, 15 பிப்ரவரி 2025 (10:03 IST)
கடந்த ஆண்டு விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.

இதையடுத்து போக்கிரி, பகவதி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த ஆண்டு அவரின் சச்சின் திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘காதலுக்கு மரியாதை’ படத்தை டிஜிட்டலாக்கி வெளியிட உள்ளாராம் தயாரிப்பாளரும் நடிகருமான பி எல் தேனப்பன். விஜய் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு உருவான காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினி, ராதாரவி, மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். மலையாள இயக்குனர் பாசில் இயக்கி இருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்