தவெக தலைவர் விஜய்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு.. மத்திய அரசு உத்தரவு..!

Siva

வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (09:24 IST)
தமிழக வெற்றி தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கி அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்துறையின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரபல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு மத்திய அரசு X மற்றும் ஒய் பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவர் பொது இடங்களுக்கு பயணம் செய்ய உள்ளதால், அவரது பாதுகாப்பை கருதி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, விஜயின் பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி ஏந்திய எட்டு முதல் 11 மத்திய அரசு பாதுகாப்பு படை கமாண்டர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பாதுகாப்பு தமிழகத்தில் விஜய் இருக்கும்போது மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விஜய் போலவே தலாய் லாமாவுக்கும் இசை பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்