"ஜில்லா" ஷூட்டிங் ஸ்பாட்டில் காஜல் அகர்வாலிடம் சேட்டை செய்த விஜய் - செம FUN வீடியோ

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:30 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் ஜில்லா படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அந்த படத்தின் ‘எப்போ மாமா ட்ரீட்’ பாடலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினருடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ விஜய், காஜல் அகர்வால் முன் நின்று கண்ணாடி காட்டி டச் பாய் போல் நின்று. செட்டில் எந்த நேரமும் மேக்கப் போடுவதை நடனமாடி காலாய்த்துள்ளார். தளபதி நிஜத்தில் அவ்வளவு அமைதியாக பார்த்திருக்கும் அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை பார்க்கும் போது அவரது இன்னொரு முகத்தை பார்ப்பதாக இருக்கிறது என கூறி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்