பிகில் பட ஆடியோ வெளியீட்டுக்கு வந்த ரசிகர்களை உள்ளே விடாமல் அடித்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதற்காக டிக்கெட்டுகள் விஜய் ரசிகர் மன்றங்கள் மூலமாகவும் ரசிகர்களுக்கு விற்கப்பட்டது. நேற்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யை காண பல ரசிகர்கள் திரண்டனர்.
ஆனால் டிக்கெட் வைத்திருந்தும் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் எழுந்த வாக்குவாதத்தில் ரசிகர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ரசிகர் ஒருவர் அவரை உள்ளே அனுமதிக்காததால் டிக்கெட்டை கிழித்து போட்டுவிட்டு சென்றுள்ளார். மற்றொரு நபர் தான் தொலைதூரத்திலிருந்து வருவதாகவும், டிக்கெட் வைத்திருந்தும் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு உள்ளே அனுமதிக்காமல் அடித்ததாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதுப்போன்ற விஷயங்களை விஜய் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் விஜய் மீது எந்த கோபமும் இல்லை. விழா நிர்வாகத்தினரின் முறையற்ற செயல்கள் மட்டுமே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Feeling Very Bad For this True Vijay Fan
We Didn't Suffer like this Love You #Thala Proud to be Thala Fan