விஜய்யே சொல்லிட்டாரு...! பிகில் ஆடியோ லான்ச் ப்ரோமோ வீடியோ!

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (18:59 IST)
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அண்மையில் இப்படத்தில் இடப்பெறும் "சிங்கப்பெண்ணே" மற்றும் வெறித்தனம் என்ற இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதையடுத்து நேற்று "உனக்காக" என்ற ரொமான்டிக் பாடலை வெளியாகி ரெண்டானது. 


 
இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சாய்ராம் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது. விஜய்யின் மேடை பேச்சுக்கள் நேரிலிருந்தே இணையத்தளம் முழுக்க பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிகழ்ச்சியில் தொலைக்காட்சி உரிமையை சன் பெற்றுள்ளது. வருகிற ஞாயிற்று கிழமை வெளியாகவுள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த வேலையில் சற்றுமுன் ஆடியோ லான்சின் ப்ரோமோ விடியோவை சன் டீவி வெளியிட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்