விஜய்யின் குஷி படத்தோடு எங்கள் படத்துக்கு எந்த தொடர்பும் இல்லை… விஜய் தேவரகொண்டா கருத்து!

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:58 IST)
லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது. அந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர் குஷி படமும் பேன் இந்தியா படம்தான் எனக் கூறியிருந்தார் விஜய் தேவரகொண்டா.

இந்த படம் செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் படம் பற்றிய நிறைய விஷயங்களை பேசினார்.

அப்போது “விஜய் சாரின் குஷி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்.  அந்த குஷியை போல எங்கள் படத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன். எனக்கு பிடித்த நடிகரின் பெயரை எனது படத்துக்கு வைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் இரண்டு படத்தின் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” எனக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்