மீண்டும் ஜோடியாகும் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!

vinoth

வெள்ளி, 9 மே 2025 (09:53 IST)
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அவர் நடித்த குஷி திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

அடுத்து இவர் நடிப்பில் ‘கிங்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் மே 30 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதையடுத்து அவர் ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் இயக்குனர் ராகுல் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘கீத கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இருவரும் தற்போது காதலில் உள்ளதாகவும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்