மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரோடு கூட்டணியா?... சூர்யா எடுத்த முடிவு!

vinoth

வியாழன், 30 அக்டோபர் 2025 (15:48 IST)
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் கருப்பு படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து சூர்யா தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ‘சூர்யா 46’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

இப்படி அடுத்தடுத்து வெளிமாநில இயக்குனர்களின் படங்களில் நடித்துவரும் சூர்யா தனது 48 ஆவது படத்தையும் ஒரு தெலுங்கு இயக்குனரிடம் ஒப்படைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கீதகோவிந்தம் மற்றும் சர்காரு வாரிபட்டா ஆகிய படங்களை இயக்கிய பரசுராம் கூறியுள்ள உணர்ச்சிப்பூர்வமானக் கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்