தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அவர் நடித்த குஷி திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.
அப்போது அவர் பேசும்போது “பாகிஸ்தானியர்கள் குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் பழங்குடியினர் போல நடந்து கொள்கிறார்கள் என்று பேசினார். இதையடுத்து அவர் பழங்குடியினரை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தன் பேச்சுக்காக அவர் மன்னிப்புக் கேட்டபோதும், தற்போது அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.