'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராஜா தொடர்ச்சியாக ரீமேக் படங்களையே இயக்கி, ரீமேக் ராஜா என்ற பெயரை பெற்றார். ஆனால் அந்த கேலிகளை உடைத்து முன்னணி இயக்குனராக அவர் தன்னை மாற்றிக்கொண்டது தனி ஒருவன் படத்தின் மூலம்தான். ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமானதொரு படமாக அமைந்தது.
இந்நிலையில் வேலைக்காரன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். அங்கு சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் படத்தை இயக்கினார். அதையடுத்து இப்போது நாகார்ஜுனாவின் 100 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை முடித்த பின்னர் ராஜா, தனி ஒருவன் 2 படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அந்த படம் அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் ராஜா இப்போது அனுஷ்காவின் சூப்பர்ஹிட் படமான அருந்ததி படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். அனுஷ்கா நடித்த வேடத்தில் ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அருந்ததி ரீமேக் பற்றி பேசியுள்ள மோகன் ராஜா ஜனவரி மாதம் முதல் இந்த படத்துக்கான பணிகள் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.