ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தவறு… வருத்தம் தெரிவித்த பிரகாஷ் ராஜ்!

vinoth

வெள்ளி, 21 மார்ச் 2025 (08:20 IST)
நடிகர் பிரகாஷ்ராஜ் தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார்.

இந்நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆன்லைன் சூதாட்ட செயலி ஒன்றின் விளம்பரதாரராக செயல்பட்டு விளம்பரங்களில் நடித்தார். அது குறித்த தனது வருத்தத்தை தற்போது அவர் பதிவு செய்துள்ளார். அதில் “2016 ஆம் ஆண்டு நான் ஆன்லைன் கேமிங் விளம்பரமொன்றில் நடித்தேன். ஆனால் அது தவறென்று அதன் பின்னர் உணர்ந்தேன். அதனால் அந்த விளம்பரத்தை ஒருவருடம் கழித்து நீட்டிக்க மறுத்துவிட்டேன்.

அதன் பின்னர் அது போன்ற விளம்பரங்களில் நான் நடிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு அந்த விளம்பரம் பயன்படுத்தப்பட்ட போது கூட நான் நோட்டீஸ் அனுப்பினேன். இளைஞர்களே உங்களுக்கு அறிவுரை. கேமிங் செயலிகளைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள்” எனக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்