சூர்யா 46 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா?

vinoth

வியாழன், 15 மே 2025 (08:56 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் ரிலீஸானது.

படம் வெளியாகிக் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் நிறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவுக்கு ‘ஒரு திரையரங்க ஹிட்டாக’ இந்த படம் அமைந்துள்ளது. இதையடுத்து சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. வெங்கட் அட்லூரி இயக்கும் சூர்யாவின் 46 ஆவது படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடியவுள்ளதாம். இந்தப் படத்தை லக்கி பாஸ்கர் புகழ் வெங்கட் அட்லூரி இயக்குகிறார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அல்லது மிருனாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீபத்தில் ‘ரெட்ரோ’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்