அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

vinoth

புதன், 7 மே 2025 (13:10 IST)
தமிழ் சினிமாவில் குறும்படம் மூலமாக அறிமுகமாகி தற்போது முன்னணிக் கமர்ஷியல் இயக்குனராக இருப்பவர் கார்த்திக் சுப்பராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த படம் 104 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய அடுத்த படத்தைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் “ரெட்ரோவுக்குப் பின்னர் என்னுடைய அடுத்த படம் என்ன என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு சிறிய படத்தைப் புதுமுகங்களை வைத்து இயக்கி, அதை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதன் பின்னர் ஒரு ஆண்டு கழித்து திரையரங்கில் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளேன். வசூல் பற்றிக் கவலைப் படாமல் அந்த படத்தை இயக்கலாம் என முடிவு செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்