சூர்யா மற்றும் ஜோதிகா கோபித்துக் கொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறேன் – ட்ரோல் குறித்து சந்தானம்!

vinoth

செவ்வாய், 13 மே 2025 (08:50 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார். அவர் நடித்து வரும் ‘தில்லுக்கு துட்டு’ வகைப் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன.

இப்போது அந்த வரிசையில் நடித்துள்ள டி டி நெக்ஸ்ட் லெவல் படத்தினல் நடித்துள்ளார். இந்த படம் மே 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், கஸ்தூரி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளனர்.இந்தப் படத்தை அவரின் நெருங்கிய நண்பர் ஆர்யா தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸான நிலையில் அதில் இயக்குனர் கௌதம் மேனனை வைத்து ‘காக்க காக்க’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘உயிரின் உயிரே’ பாடலை ரி க்ரியேட் செய்திருந்தனர். இது இணையத்தில் வைரலானதை அடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அதுபற்றி பேசியுள்ளார் சந்தானம். அதில் அந்த காட்சிகளைப் பார்த்து ‘சூர்யா சார், ஜோதிகா மேடம் மற்றும் அவர்களின் ரசிகர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்