விஜய் தேவரகொண்டா- மைக் டைசன் நடித்த ‘லைகர்’ படத்தின் அடுத்த அப்டெட்… வைரல் போஸ்டர்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (09:15 IST)
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் குத்துச் சண்டையை மையமாகக் கொண்டு லைகர் திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய் தேவாரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய அடுத்தகட்ட தகவல் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி சமீபத்தில் வெளியாகியுள்ள போஸ்டரில் “ எச்சரிக்கை…அவன் தன்னுடைய வேட்டைக்காக தயாராகி விட்டான். மே 9 – மாலை 4 மணி” என ஆர்வத்தைக் கிளப்பும் விதமாக வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்