ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் !

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (17:40 IST)
நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
தெலுங்கு சினிமாவில் ‘ரவுடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, பெல்லி சூப்புலு’,அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’, டாக்ஸிவாலா’ ,  உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைப் பெற்று  ‘நோட்டா’ படம் மூலம் தமிழ்ப் படங்களிலும் நேரடியாக நடிக்கத் துவங்கினர். 
 
தற்போது தெலுங்கில் பிஸியாக  நடித்து வரும் இவர்  ஓய்வெடுக்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்து பல படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். நேற்று ஹோலி பண்டிகையை கொண்டாடிய அவருக்கு திடீரென்று காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
விஜய்க்கு கவலைப்படும்படி ஒன்றும் இல்லை. அவருக்கு ஓய்வு தேவை. ஆனால் அவரால் தற்போது பிரேக் எடுக்க முடியாது. அதனால் உடனே குணமடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
இதனை அறிந்த அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்