கையில் சரக்கு பாட்டிலுடன் தெம்மாங்கா சுற்றும் விஜய்... படம் முழுக்க அட்வைஸ் கொடுக்கும் சீனியர்..?

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (14:19 IST)
கைதி படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு தடங்கலுக்கு பிறகு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறு விறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. விஜய் பேராசிரியாக நடிக்கும்  இப்படத்தில் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்கிறார். என்ற தகவல் கிடைத்திருந்தது. இந்நிலையில் நேற்று  "ஒரு குட்டி கத" என்ற இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். விஜய் பேராசிரியாக ஹீரோயிசம் செய்தாலும் எபோதும் கையில் மது பாட்டிலுடன் குடியும் கூத்துமாகமே இருப்பாராம். 
 
இதனை நேற்று வெளியான போஸ்டர் உறுதிப்படுத்தியிருந்தது.  கையில் jack daniel hip flask ரக சரக்கு பாட்டிலுடன் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு குடிபோதையில் தெம்மாங்காக படுத்திருக்கிறார். விஜய் கல்லூரி சீனியராக இருக்கும் போது இடம் பெரும் காட்சியாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. ஆக படத்தில் நிறைய அட்வைஸ் , வார்னிங் மெசேஜ் உள்ளிட்டவை ரொம்பி கிடக்கும் என அஞ்சப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்