இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளிமயில் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் பிச்சைக்காரன் 2 ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தால் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்தார். இதனால் அவர் நடித்து வந்த வள்ளிமயில் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங் தடைபட்டது.
பின்னர் விஜய் ஆண்டனி குணமானதும் மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நாளை இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. வள்ளிமயில் திரைப்படம் 80 களில் நடக்கும் நாடகப் பின்னணியிலான ஒரு படம் என சொல்லப்படுகிறது.