விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (16:09 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் ஜனவரி 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஏற்கனவே நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5வது படத்தின் பூஜை ஒன்று நடைபெற்றது. இந்த படம் விஜய் ஆண்டனிக்கு 14 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது . இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ஜனவரி 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான போஸ்டரை இப்போது படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்