எப்படி இருக்கு விஜய் ஆண்டனியின் ஹிட்லர் பட டீசர்?

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (12:41 IST)
இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து தொடர்ந்து நடிப்பிலும் இசையிலும் கவனம் செலுத்தி வந்தார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி மாஸ் ஹீரோ ஆனார் விஜய் அண்டனி. சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் பிச்சைக்காரன் 2 ரிலீஸ் ஆகி அந்த படமும் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது விஜய் ஆண்டனி ஹிட்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை படைவீரன் படத்தின் இயக்குனர் தனா இயக்கி வருகிறார்.ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

அரசியல் பின்னணியில் உருவாகும் ஆக்‌ஷன் கதைக்களம் என்பது டீசரைப் பார்க்கையில் தெரிகிறது. அரசியல்வாதியாக சரண்ராஜ் நடிக்க, கௌதம் மேனன் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கோடிக்கணக்கான பணப்புழக்கத்தை தடுக்கும் ஒரு நபராக விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்பது தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்