பூங்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (12:11 IST)
தென் கொரியாவில் ஆஸ்கர் விருது வென்ற படத்தில் நடித்த பிரபல நடிகர் பூங்கா அருகே பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தென் கொரிய இயக்குனர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் 2019ல் வெளியாகி ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படம் “பாரசைட்”. இந்த படத்தில் தென் கொரிய நடிகர் லீ சுன் க்யூன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். லீ சுன் க்யூன் தென் கொரிய திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லீ சுன் க்யூன் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சியோல் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் லீ சுன் க்யூன் கார் ஒன்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் புகழ்பெற்ற நடிகரின் இந்த மரணம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்