ஆமையும் ஒரு உயிர்தான்… நெகட்டிவ் தலைப்புகள் ஏன்? – விஜய் ஆண்டனி பதில்!

vinoth

வியாழன், 29 மே 2025 (08:14 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதன் காரணமாக இசையமைப்புப் பணிகளை ஒதுக்கினார். தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார்.தற்போது அவர் சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். ககனமார்க்கன் படத்தை பிரபல படத்தொகுப்பாளரான லியோ ஜான் பால் இயக்குகிறார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி பேசும்போது “தொடர்ந்து என் படங்களுக்கு ‘சைத்தான்’, ‘கொலைகாரன்’ மற்றும் பிச்சைக்காரன் என்று நெகட்டிவ் தலைப்புகளாக வைப்பதாக சொன்னார்கள். எனக்கு நெகட்டிவ் என்பதேக் கிடையாது. ஆமை புகுந்த  வீடு உருப்படாது என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆமையும் ஒரு உயிர்தான்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்