மோகன்லாலின் ‘ப்ளாக்பஸ்டர்’ துடரும் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

செவ்வாய், 27 மே 2025 (11:29 IST)
மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.

இதையடுத்து ஏப்ரல் 25 ஆம் தேதி மோகன்லால், ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் தருண்மூர்த்தி இயக்கத்தில் உருவான ‘துடரும்’ படம் ரிலிஸானது. இந்த படத்துக்குப் பெரிய அளவில் எந்த விளம்பரமும் செய்யவில்லை. ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்குப் பிறகு படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் மூலம் படம் பிக்கப் ஆனது. அதன் காரணமாகக் கேரளாவைத் தாண்டியும் தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

உலகளவில் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. கேரளாவில் மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் மலையாளத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்நிலையில் ‘துடரும்’ படம் மே 30 ஆம் தேதி முதல் ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

ജിയോഹോട്ട്സ്റ്റാറിൽ തുടരും!

Thudarum will be streaming from 30 May only on JioHotstar.@mohanlal @shobana_actor @Rejaputhra_VM @talk2tharun#Thudarum #JioHotstar #JioHotstarMalayalam #ThudarumOnJioHotstar #Mohanlal #Shobhana #MalayalamCinema #Mollywood #ThudarumMoviepic.twitter.com/9DPjB8zio3

— JioHotstar Malayalam (@JioHotstarMal) May 26, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்