சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

செவ்வாய், 27 மே 2025 (10:07 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே,ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனாலும் இந்த படத்துக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. முதல் நாளில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த படம் அதன் பின்னர் வசூலில் அடிவாங்கியது. படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் இந்த படம் 104 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பின்னர் வசூல் படிப்படியாகக் குறைந்தது.

இந்நிலையில் இந்த படம் ஒட்டுமொத்தமாக- திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வியாபாரம் மூலமாக- 235 கோடி ரூபாய் சம்பாதித்தாகப் படக்குழு அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளில் சூர்யாவுக்கு ஒரு வெற்றிப்படமாக ‘ரெட்ரோ’ அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 31 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்