நான் செய்த தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்… ‘மார்கன்’ பட இயக்குனருக்கு விஜய் ஆண்டனி அறிவுரை!

vinoth

செவ்வாய், 27 மே 2025 (07:35 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். அவர் இசையமைக்கும் குத்துப் பாடல்கள் ரசிகர்களுக்கு வேற லெவல் ‘vibe’ கொடுத்தன.இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதன் காரணமாக இசையமைப்புப் பணிகளை ஒதுக்கினார். தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார்.தற்போது அவர் சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். ககனமார்க்கன் படத்தை பிரபல படத்தொகுப்பாளரான லியோ ஜான் பால் இயக்குகிறார்.

அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனி “நான் நடிகன் ஆனதும் இசையமைப்பதை நிறுத்திவிட்டேன். அந்தத் தவறை நீங்களும் செய்யாதீர்கள் லியோ. நீங்கள் மிகச்சிறந்த படத்தொகுப்பாளர். இந்த படம் ஹிட்டாகி உங்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தாலும் அந்த பணியை விட்டுவிடாதீர்கள். நானும் இப்போது மீண்டும் இசையமைக்கப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்