கோட் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்துள்ள வெங்கட்பிரபு!

vinoth
செவ்வாய், 28 மே 2024 (08:38 IST)
விஜய் அரசியலில் இறங்கப் போவதால் தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில்  செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் மற்றும் டி ஏஜிங் பணிகளுக்காக வெங்கட்பிரபு மற்றும் விஜய் ஆகியோர் அமெரிக்கா சென்று திரும்பினர். இந்தவாரத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடந்தால் மொத்த படமும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் போஸ்டரில் இரண்டு விஜய் இருப்பது போன்று வெளியிட்டிருந்தனர். அதனால் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம். அதை வெங்கட் பிரபு சர்ப்ரைஸாக வைத்துள்ளாராம். அது திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்