தளபதி விஜய்க்கும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை என்றும் இருவரும் சில ஆண்டுகளாக பேசிக் கொள்வதில்லை என்றும் இணையத்தில் செய்திகளை கசிந்தன. ஆனால் விஜய் தரப்பு அவ்வப்போது அப்பா அம்மாவுடன் அவர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார் என்றும் அப்பா அம்மாவை அவ்வப்போது அவர் சந்தித்து வருவதாகவும் தான் கூறி வந்தன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதல் முறையாக தனது அப்பா அம்மாவை சந்தித்துள்ளார். இன்று இந்த சந்திப்பு நடந்ததாக எஸ்ஏசி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ள நிலையில் இந்த க்யூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.