தயிர் பாக்கெட்டில் இந்தி பெயர் தேவையில்லை- மத்திய அரசு

வியாழன், 30 மார்ச் 2023 (15:00 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்ற இந்தி வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமென்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறியது.

அதன்படி,  தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் தஹி( தயிர்), கர்நாடகத்தில் தஹி( மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் மத்திய அரசு இந்தி திணிப்பு மேற்கொள்ள முயற்சிக்கிறதா என்று கேள்வி எழுந்த  நிலையில், இதற்குக் கடுமையாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகிறது.
.
இதனால் மீண்டும்  மத்திய அரசு இந்தி திணிப்பை தொடங்கியுள்ளதா? என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று, முதல்வர் முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!

மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition

குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!’’ என்று  எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று,’’ தயில் பாக்கெட்டுகளில் இந்தி பெயர் தேவையில்லை’’ என்று மத்திய அரசு கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்