தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு படம் இயக்கும் விக்னேஷ் சிவன்!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (08:46 IST)
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க,விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்துக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைக்கதை லைகா மற்றும் அஜித் தரப்புக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டு, இப்போது மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக விக்னேஷ் சிவன் இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிகிறது.

இதற்கிடையில் விக்னேஷ் சிவன் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதீப் படத்தை முடித்துவிட்டு இந்த படத்தை அவர் இயக்குவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்