விடுதலை 2 ஆம் பாக ரிலீஸை முன்னிட்டு முதல் பாகத்தை இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் ஓடிடி நிறுவனம்!

vinoth
வியாழன், 12 டிசம்பர் 2024 (12:29 IST)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை 2 டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா படம் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விடுதலை 2 படத்தின் ரிலீஸை முன்னிட்டு முதல் பாகத்தை நாளை முதல் இலவசமாக ஜி 5 ஓடிடி தளத்தில் பார்க்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்