ஓடிடி வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்… பாலிவுட் நடிகை ஆர்வம்!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (16:10 IST)
ஓடிடியில் ஏதாவது செய்யவேண்டும் எனக் காத்திருப்பதாக நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை அடுத்து ஓடிடி பக்கம் திரையுலகினரும் , ரசிகர்களும் சாய ஆரம்பித்துள்ளனர். இதில் பல புதிய படங்கள் நேரடியாகவும் சீரிஸ்களும் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் ஓடிடியால் சினிமா திரையரங்குகள் அழிந்துவிடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள நடிகை வித்யா பாலன் ஓடிடி தளங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் ஓடிடி தளங்களில் சீரிஸ் போன்றவற்றை எடுக்கலாம் என்றும் அதற்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தனக்காக ஓடிடியில் சிறந்த வாய்ப்புகள் கிடைத்தால் அதை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்