‘ரஜினிக்குக் கதை சொல்ல அந்த இயக்குனரை அனுப்பினேன்’… ஆனால்?- கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த தகவல்!

vinoth

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (07:50 IST)
குறும்பட இயக்குனராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணிக் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். அவரின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்குப் பிறகு சூர்யாவை வைத்து ‘ரெட்ரோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்தப் படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் கார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அதில் “ரஜினி சாருக்காகக் கதை சொல்ல நான் சில இயக்குனர்களை அனுப்பினேன். அவருக்காக நான் பிற இயக்குனர்களைக் கதை சொல்ல அனுப்புவதை ரஜினி சார் பாராட்டினார். இயக்குனர் பொன்ராம், ரஜினி சாருக்காக ஒரு கிராமத்துக் கதையை வைத்திருந்தார். அதை ரஜினி சாரிடம் சொல்ல வைத்தேன். ஆனால் அவர் அப்போது ‘அண்ணாத்த’ கதையைத் தேர்ந்தெடுத்தார்.” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்