படம் வெளியானது முதல் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படத்தின் ஒரே குறையாக படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் அரசியல் சித்தாங்களையோ பொன்மொழிகளையோ உதிர்த்துக் கொண்டே செல்கிறது. அந்த வசனங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு வசனங்களாக இருந்தாலும் சினிமாவில் அதைக் காட்சியாகதானே வைக்கவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனாலும் படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.