கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

Mahendran
வியாழன், 19 டிசம்பர் 2024 (17:32 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை 2’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இன்று இந்த படத்தின் எட்டு நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில், இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ’விடுதலை 2’. இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த படம் சென்சாராகி, ரன்னிங் டைமிங் உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று திடீரென இந்த படத்தில் உள்ள எட்டு நிமிட காட்சிகளை நீக்கி உள்ளதாக வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

"கடைசி நிமிடத்தில் படத்தில் உள்ள எட்டு நிமிட காட்சிகளை நீக்கி உள்ளோம். படக்குழுவில் இருந்த அனைவருக்கும் இது ஒரு புது அனுபவம். இந்த பயணமே மிகப்பெரியது. எல்லோருடைய பங்களிப்பும் தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளது," என்று கூறியுள்ளார்.

"இந்த படத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். ஒரு படமாக இது எப்படி உள்ளது என்பதை பார்வையாளர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் அனுபவமாக, நாங்கள் இந்த படத்தால் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். நிறைய உழைப்பினை காட்டியுள்ளோம்," என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்