டிசம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுதலை 2 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் வன்முறை அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 52 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் என்பது அதிகமாக இருப்பதாகவும், ஒரு வேலை ரிலீஸுக்கு பின்னர் குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் ஏழு இடங்களில் சென்சார் கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில அரசியல் மற்றும் கெட்ட வார்த்தைகள் கொண்ட வசனங்கள் சென்சார் அதிகாரிகளால் மியூட் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.