இந்நிலையில் இந்த படத்தின் மூலக்கதையை எழுதியவராக டைட்டில் கார்டில் இடம்பெற்றுள்ள இயக்குனர் தங்கம் வெற்றிமாறன் மீது அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில் “என்னுடைய வேங்கச்சாமி திரைக்கதைக்காக நான் 8.25 லட்சம் செலவு செய்து உருவாக்கினேன். அந்த திரைக்கதையை நான் படமாக்குகிறேன் என வெற்றிமாறன் வாங்கினார். நான் முதலில் மறுத்தாலும் பின்னர் பழங்குடி அரசியலைப் பேசும் ஒரு படம் வரவேண்டும் என அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் இப்போது விடுதலை படங்களில் எனக்கு மூலக்கதை என டைட்டில் போடுகிறார். இப்படி சொல்லியா அவர் என்னிடம் திரைக்கதையை வாங்கினார். அது குறித்து நான் குற்றச்சாட்டுகளை வைத்தால் வெற்றிமாறனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்னை மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதில் ஒருவர் என்னை வீடுபூந்து அடிப்பேன் என்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் நான் இயக்கிய காற்றின் தீராதப் பக்கங்களில் ஆவணப்படத்தில் இருந்து நான் வெளியேறயவும் இதுபோன்ற ஆட்கள்தான் காரணம். பாசிசத்துக்கு எதிராகப் படம் எடுப்பதாக சொல்லிக்கொள்ளும் வெற்றிமாறன் ஒரு பாசிஸ்ட் போல நடந்து கொள்கிறார்” எனக் கூறியுள்ளார்.