திரைப்படமாகிறது வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (08:09 IST)
திரைப்படமாகிறது வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக திட்டமிடப்பட்டுள்ளதாக பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கிய வீராங்கனை வேலு நாச்சியார் என்பதும் அவர் குதிரை ஏற்றம் வாள் சண்டை உள்பட பல வீரதீர செயல்களில் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க போவதாக பிரபல இயக்குனர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார். 
 
ஃபைவ் ஸ்டார், திருட்டுப்பயலே உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய சுசிகணேசன் வீர தமிழச்சி வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தை இன்றைய தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் 
 
வீரமங்கை வேலுநாச்சியார் வேடத்தில் நடிக்க முக்கிய நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்