வேலுநாச்சியார் பிறந்தநாள்: தமிழில் டுவிட் செய்த பிரதமர் மோடி!

திங்கள், 3 ஜனவரி 2022 (09:00 IST)
கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து முதல் முறையாக பெண் ஒருவரின் தலைமையில் போர் நடந்தது என்றால் அது வீர மங்கை ராணி வேலுநாச்சியார் தலைமையில் தான் என்பது அனைவரும் அறிந்ததே 
 
சிலம்பம் களரி குதிரை சவாரி உள்பட பல கலைகளில் தேர்ந்தவரான வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் இன்று வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்.  அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்