தீபாவளியை விஜய்க்கு விட்டு கொடுத்து, கிறிஸ்துமஸை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (22:59 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் மெர்சல் படத்துடன் வெளிவரும் என்று கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் செய்திகள் ஓடியது. இதனால் மெர்சல் குழுவினர் அதிர்ச்சி அடைந்ததும் உண்மை



 
 
ஆனால் இந்த செய்தி வதந்தி என்பது தற்போது உறுதியாகிவிட்டது. ஆம், சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என்று 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தீபாவளி தினத்தில் ஏற்கனவே சில பெரிய படங்களின் ரிலீஸ் திட்டமிட்டுள்ளதால் அதற்கு அடுத்த திருவிழா விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் விடுமுறையில் இந்த படத்தை வெளியிடுவதாகவும், தாமதத்திற்கு வருந்துவதாகவும், தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். அனிருத் இசையமப்பில் ராம்ஜி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்