இதனால்தான் தள்ளிப்பேனதா சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்?

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (09:50 IST)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் திரைப்படம் வேலைக்காரன். இப்படத்தில், மலையாளத்தில் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார்.

 
 
பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப்  படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். 
 
விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ரிலீஸாகும் என கூறப்பட்டது. பிறகு இம்மாதம் இறுதியில் 29ம் தேதி வெளியாகும் என  அறிவிக்கப்பட்டது. படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ள நிலையில் படம் டிசம்பர் மதத்திற்கு தள்ளி போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் வெளியாவதால், தியேட்டர் கிடைப்பது கஷ்டம் என கருதி படத்தை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்