வேதாளம் படத்தின் ரிலீஸ் ஆகாத டிரைலரை வெளியிட்ட எடிட்டர்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (10:13 IST)
நடிகர் அஜித் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் வேதாளம்.

அஜித், ஸ்ருதிஹாசன் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘ வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசனின் தூங்காவனம் என்ற படத்துடன் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும். அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் கனமழை நேரத்திலும் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. அஜித்தின் சினிமா கேரியரில் மிகப்பெரிய ஹிட்படங்களில் ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்போது படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் எடிட்டர் ரூபன் தற்போது வேதாளம் படத்துக்காக தான் உருவாக்கிய இதுவரை வெளியாகாத டிரைலரை தற்போது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்