ஒரு பக்கம் இந்தியன் 2.. இன்னொரு பக்கம் வெப் சீரிஸ் – பிஸியாக வலம் வரும் இயக்குனர் வசந்தபாலன்!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:22 IST)
இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

தன்னுடைய பள்ளி நண்பர்களோடு இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் தன்னுடைய ’அநீதி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் அநீதி படத்துக்குப் பிறகு வசந்தபாலன் வெப் தொடர் ஒன்றை இயக்க உள்ளார். இந்த வெப் தொடர் ஜீ 5 தளத்திற்காக உருவாக்கப்படுகிறது. இதில் வெயில் படத்துக்குப் பின் வசந்தபாலன் இயக்கத்தில் பரத் நடிக்கிறார்.

இந்த வெப் சீரிஸில் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், கிஷோர், கவிதா பாரதி உட்பட பலர் நடிக்கின்றனர். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் கடைசி கட்ட ஷூட்டிங் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு பக்கம் வசந்தபாலன், இந்தியன் 2 படத்தில் இரண்டாம் யூனிட் இயக்குனராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்